×

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

திருவொற்றியூர்: நேற்று முன்தினம் இரவு சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 5வது நடைமேடையில் வந்த மங்களூரு விரைவு எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, பொது பெட்டியில் சந்தேகப்படும்படி ஒரு பை இருந்தது. அதை சோதனை செய்தபோது அதில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

அதை பறிமுதல் செய்து, வடக்கு போதை தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைந்தனர். இதை யார் கடத்தி வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போதைப்பொருட்களை கடத்தி வருபவர்கள் போலீசார் பிடியில் சிக்கி விடுவோம் என தெரிந்தால் அங்கிருந்து நைசாக நழுவி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படி இல்லை என்றால் அந்த பார்சலை எடுத்துச் சென்று விடுகின்றனர்.

The post சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags :
× RELATED மின்னல் வேகத்தால் பறிபோன உயிர்...