×

மது விற்ற 4 பெண்கள் கைது

திருவொற்றியூர்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தது. இதை பயன்படுத்தி, திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த மேரி (60), உமா (55), அஞ்சலை (60), சுந்தரவல்லி (60) ஆகியோர், தங்கள் வீடுகளில் மது பாட்டில்களை அதிகளவில் பதுக்கி வைத்து, எம்ஜிஆர் நகர், திருவொற்றியூர் குப்பம் போன்ற பகுதிகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்துள்ளனர்.

இதுபற்றி அறிந்த திருவொற்றியூர் போலீசார், அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து 50 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து பிடிபட்ட 4 பெண்கள் மீதும் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post மது விற்ற 4 பெண்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur ,Gandhi Jayanti ,Tasmac ,Mary ,Uma ,Anjalai ,Sundaravalli ,
× RELATED திருவொற்றியூர் சாலையோரம் ஏடிஎம்...