×

தங்கம் விலை மேலும் அதிகரிப்பு சவரன் ரூ.56,880க்கு விற்பனையாகி புதிய உச்சம்

சென்னை: தங்கம் விலை சர்வதேச சந்தையை பொறுத்து, ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. கடந்த மாதம் 21ம் தேதி சவரன் ரூ.55,680, 23ம் தேதி ரூ.55,840, 24ம் தேதி ரூ.56,000, 25ம் தேதி ரூ.56,480, 27ம் தேதி ரூ.56,800 என்றும் அடுத்தடுத்து தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. அதன் பிறகு 28ம் தேதி ஒரு சவரன் ரூ.56,760, 30ம் தேதி ரூ.56640, அக்டோபர் 1ம் தேதி ரூ.56400 என்றும் விலை சற்று குறைந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்வை சந்தித்தது.

கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7100க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.56,800க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து நேற்றும் தங்கம் விலை சற்று உயர்ந்தது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,110க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.56,880க்கும் விற்கப்பட்டது.

அதே நேரத்தில் தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சத்தையும் அடைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தசரா திருவிழா, தொடர்ந்து தீபாவளி பண்டிகை என்று பண்டிகை நாட்கள் வருகிறது. இந்த நேரத்தில் தங்கம் விலை அதிகரித்து வருவது நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post தங்கம் விலை மேலும் அதிகரிப்பு சவரன் ரூ.56,880க்கு விற்பனையாகி புதிய உச்சம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Sawaran ,Dinakaran ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!