×

ஸ்டார் ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரை: மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டல், விமானநிலைய சாலையில் உள்ள ஒரு ஓட்டல், பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டல் மற்றும் காளவாசலில் உள்ள ஒரு ஓட்டல் ஆகிய 4 பிரபல நட்சத்திர ஓட்டல்களுக்கு இ-மெயில் மூலம் நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது. உடனடியாக 4 இடங்களுக்கும் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்கள் சென்றனர். ஓட்டல்கள் முழுவதும் சோதனை நடத்தினர். அங்கு வெளி மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா வந்த பயணிகள் தங்கியிருந்தனர். போலீசாரின் வேண்டுகோள்படி அவர்களுக்கு ஓட்டல் நிர்வாகம் தகவல் தெரிவிக்கவில்லை. முழுமையான சோதனைக்கு பிறகு, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரிய வந்தது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் தனிக்குழு விசாரணை நடத்தி வருகிறது.

The post ஸ்டார் ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai Chinna Chokkikulam ,Periyar ,Kalavasal ,Dinakaran ,
× RELATED கஞ்சா வழக்கில் யூடியூபர் சங்கர் சிறையிலடைப்பு