×
Saravana Stores

மண் கடத்திய டிராக்டர், பொக்லைன் பறிமுதல் டிரைவர்கள் 2 பேர் கைது

போச்சம்பள்ளி, அக்.2: போச்சம்பள்ளி அருகே பாரண்டப்பள்ளி ஏரியில் இருந்து மண் கடத்துவதாக விஏஓ ராஜாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர் பாரண்டப்பள்ளி ஏரிக்கு சென்று ேசாதனை நடத்தினார். அப்போது, சிலர் பொக்லைன் மூலம் டிராக்டரில் மண் அள்ளிக்கொண்டிருந்தனர். இதையடுத்து, அனுமதியின்றி ஏரியில் மண் கடத்த பயன்படுத்திய பொக்லைன் மற்றும் டிராக்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர், பொக்லைன் டிரைவரான காட்டுவென்றவள்ளி கிராமத்தைச் சேர்ந்த அரி(39) மற்றும் டிராக்டர் டிரைவரான குப்பனூர் மணிகண்டன்(30) ஆகியோரை பிடித்து போச்சம்பள்ளி போலீசில் ஒப்படைத்தார். போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தர்மபுரி சிறையிலடைத்தனர்.

The post மண் கடத்திய டிராக்டர், பொக்லைன் பறிமுதல் டிரைவர்கள் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Bochambally ,VAO Raja ,Parandapally lake ,Barandapalli lake ,Yeshadan ,Dinakaran ,
× RELATED பெருமாள் கோயிலில் பால்குட ஊர்வலம்