×

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிப்பு!

சென்னை: மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 2025ம் ஆண்டு குடியரசு தினத்தன்று 5 பேருக்கும் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார். காந்தியடிகள் காவலர் விருதுடன் பரிசுத் தொகையாக ஒவ்வொருவருக்கும் ரூ.40,000 வழங்கப்படும். இது தொடர்பாக தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

முதலமைச்சர் அவர்கள், மதுவிலக்கு அமலாக்கப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக (i) பெ.சின்னகாமணன், காவல் ஆய்வாளர், மத்திய நுண்ணறிவு பிரிவு விழுப்புரம் மண்டலம், (ii) கி.மகாமார்க்ஸ், தலைமை காவலர்-1989, விழுப்புரம் தாலுகா சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையம், விழுப்புரம் மாவட்டம், (iii) க.கார்த்திக், தலைமை காவலர்-2963, துறையூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, திருச்சி மாவட்டம், (iv) கா.சிவா. இரண்டாம் நிலை காவலர்-1443, ஆயுதப்படை, சேலம் மாவட்டம் மற்றும் (v) ப.பூமாலை, இரண்டாம் நிலை காவலர் 764, ஆயுதப்படை, சேலம் மாவட்டம், ஆகியோருக்கு 2024-ம் ஆண்டுக்கான காந்தியடிகள் காவலர் விருது வழங்க உத்தரவிட்டுள்ளார்கள்.

இவ்விருது முதலமைச்சர் அவர்களால் 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் நாள். குடியரசு தினத்தன்று வழங்கப்படும். இவ்விருதுடன், பரிசுத்தொகையாக ரூ.40,000/- ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும். என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Government of Tamil Nadu ,Republic Day 2025 ,Chief Minister ,K. Stalin ,Dinakaran ,
× RELATED அடுக்குமாடி குடியிருப்பு...