×

கோயம்பேடு மார்க்கெட்டில் கத்தரிக்காய் விலை திடீர் உயர்வு

சென்னை: கத்தரிக்காய் வரத்து குறைந்ததால் கோயம்பேடு மார்க்கெட்டில் கத்தரிக்காய் விலை அதிகரித்து விற்கப்பட்டது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சில நாட்களாக கத்தரிக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ₹12 முதல் ₹15க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று கத்தரிக்காய் வரத்து குறைந்ததால் ஒரு கிலோ கத்தரிக்காய் ₹20க்கு விற்பனை செய்யப்பட்டது.

ேமலும், மார்க்கெட்டில் மற்ற காய்கறிகளின் விலை விவரம் வருமாறு:
வெங்காயம் ₹55, தக்காளி ₹50, உருளை கிழங்கு ₹40, சின்ன வெங்காயம் ₹70, கேரட் ₹60, பீன்ஸ் ₹80, பீட்ரூட் ₹40, சவ்சவ் ₹25, முள்ளங்கி ₹13, வெண்டைக்காய் ₹25, பாவக்காய் ₹30, புடலங்காய் ₹20, சுரக்காய் ₹20, சேனைக்கிழங்கு ₹65, முருங்கைக் காய் ₹60 வரை, காலிபிளவர் ₹20, வெள்ளரிக்காய் ₹ 15, பச்சை மிளகாய் ₹50, இஞ்சி ₹150 வரை, பூண்டு ₹350, அவரைக்காய் ₹30, மஞ்சள்பூசணி ₹15, வெள்ளை பூசணி ₹13, பீர்க்கங்காய் ₹30, எலுமிச்சை ₹140, கோவக்காய் ₹25 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டன.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் கத்தரிக்காய் விலை திடீர் உயர்வு appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,CHENNAI ,Koyambedu market ,Dinakaran ,
× RELATED கோயம்பேட்டில் சாலை ஆக்கிரமித்த ஆம்னி பஸ்களுக்கு அபராதம்