நகரின் முக்கிய சாலைகளை ஒரு வழிப்பாதையாக மாற்ற வேண்டும்: தொழில் வணிகக்கழகம் கோரிக்கை

 

காரைக்குடி, அக்.1: காரைக்குடி தொழில் வணிகக்கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. செயலாளர் லயன்ஸ் கண்ணப்பன் வரவேற்றார். தலைவர் சாமி திராவிடமணி தலைமை வகித்தார். பொருளாளர் எஸ்எல்பி சரவணன் முன்னிலை வகித்தார். ஏஎஸ்பி அனிகேத் அஷோக், டாக்டர் திருப்பதி, தொழிலாளர் நலச்சட்டங்கள் குறித்து ஆய்வாளர் ஆறுமுகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். துணைத் தலைவர்கள் சத்தியமூர்த்தி, பெரியதம்பி, சித்திரவேல், காசி விசுவநாதன் மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், மின் கணக்கீட்டை ஒவ்வொரு மாதமும் ரீடிங் செய்து, பழைய முறைப்படி ஒவ்வொரு மாதமும் கட்டணம் செலுத்தும் முறையை மீண்டும் கொண்டு வரவேண்டும். வளர்ந்து வரும் காரைக்குடி மாநகராட்சியில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. எனவே முன்பு நடைமுறையில் இருந்தது போல், நகரின் முக்கிய சாலைகளை ஒரு வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post நகரின் முக்கிய சாலைகளை ஒரு வழிப்பாதையாக மாற்ற வேண்டும்: தொழில் வணிகக்கழகம் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: