×

சிறுமிக்கு பாலியல் தொல்லை தனியார் பள்ளி ஆசிரியை கைது

 

அன்னூர், செப். 30: கோவை மாவட்டம், அன்னூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி இவர் கோவில்பாளையம் அருகே தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். 2 நாட்களுக்கு முன்பு அதே பள்ளியில் சமூக அறிவியல் பாடம் நடத்தி வரும் சௌந்தர்யா (32), என்ற ஆசிரியை 13 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சௌந்தர்யாவை கைது செய்து கோவை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை தனியார் பள்ளி ஆசிரியை கைது appeared first on Dinakaran.

Tags : Annur ,Annoor, Coimbatore ,Kovilpalayam ,
× RELATED திருச்செந்தூர் கடல்நீரை வீட்டில் பூஜை அறையில் வைத்து வணங்கலாமா?