×

திண்டுக்கல் மாநகராட்சியுடன் 10 கிராம ஊராட்சிகளை இணைக்க ஆணை

திண்டுக்கல், செப். 30: திண்டுக்கல் மாநகராட்சி மொத்தம் 48 வார்டுகள் உள்ளன. தமிழக அரசு கடந்த 2014ம் ஆண்டு திண்டுக்கல் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசு ஆணை வெளியிட்டது. இதையடுத்து திண்டுக்கல் மாநகராட்சியின் எல்லை பகுதி விரிவாக்க பணி நடைபெற்றது. திண்டுக்கல் மாநகராட்சியுடன் சீலப்பாடி, செட்டிநாயக்கன்பட்டி, அடியனுத்து, தோட்டனுத்து, முள்ளிப்பாடி, பள்ளப்பட்டி, பொன்னிமாந்துறை பிள்ளையார்நத்தம், பாலகிருஷ்ணாபுரம் குரும்பபட்டி உள்ளிட்ட 10 கிராம ஊராட்சிகளை திண்டுக்கல் மாநகராட்சி உடன் இணைக்க தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை அடுத்து நகராட்சி நிர்வாக இயக்குனரகம் திண்டுக்கல் மாநகராட்சியுடன் 10 கிராம ஊராட்சிகளை இணைக்க ஆணை வெளியிட்டுள்ளது.

The post திண்டுக்கல் மாநகராட்சியுடன் 10 கிராம ஊராட்சிகளை இணைக்க ஆணை appeared first on Dinakaran.

Tags : Dindigul Corporation ,Dindigul ,Government of Tamil Nadu ,Dindigul Municipality ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல்லில் அமித்ஷாவை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்