×
Saravana Stores

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி நைனாமலை பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்

சேந்தமங்கலம்: புரட்டாசி 2வது சனிக்கிழமையான நேற்று, நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சேந்தமங்கலம் அடுத்த மின்னாம்பள்ளியில், நைனாமலை வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. 2700 அடி உயரத்தில் உள்ள இந்த கோயிலுக்கு, 3600 படிக்கட்டுகளை கடந்து சென்று பெருமாளை பக்தர்கள் வழிபடுவார்கள். ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான உற்சவ திருவிழா தொடங்கியது.

பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள், வெள்ளிக்கிழமை மாலை முதலே மலையேறி வரதராஜ பெருமாளை வழிபாடு செய்தனர். நாமக்கல், சேலம், ராசிபுரம் பகுதிகளிலிருந்து பக்தர்களின் வசதிக்காக, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. மலை மீது ஏறி செல்ல முடியாத வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் அடிவாரத்தில் உள்ள பாத மண்டபத்தில் ஆஞ்சநேயரை வழிபட்டனர்.
புரட்டாசி 2வது சனிக்கிழமை என்பதால்இ வரதராஜ பெருமாளுக்கும்இ ஆஞ்சநேயருக்கும் பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டிருந்தது. பின்னர்,

வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நைனாமலைக்கு வந்து மலை ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி, சேந்தமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மலையேறி செல்லும் பக்தர்கள், அருவாபாலியில் உப்பு போட வேண்டாம் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

The post புரட்டாசி சனிக்கிழமையையொட்டி நைனாமலை பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : Nainamalai Perumal Temple ,Puratasi ,Senthamangalam ,Sami ,Varadaraja ,Perumal temple ,Nainamalai ,Minnampalli ,Nainamalai Varadaraja Perumal Temple ,
× RELATED ஓட்டல், மளிகை கடைகளில் பிளாஸ்டிக் கேரிபேக் பறிமுதல்