×

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

சிவகாசி, செப்.29: திருத்தங்கல்லில் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டி ரோடு பசும்பொன்நகரில் தமிழரசன் என்பவர் வீட்டில் நேற்று முன்தினம் அதிகாலை மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தமிழரசன் அண்ணன் கலையரசன் கொடுத்த புகரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தினேஷ்குமார் (22), சுரேஷ்பிரகாஷ் (19) மற்றும் 3 சிறுவர்கள் என 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த 5 பேரும் திருத்தங்கல் பகுதியில் அரிவாளுடன் வந்து பொதுமக்களுக்கு அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியதாக திருத்தங்கல் சப் இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் கொடுத்த புகாரின் பேரிலும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruthangal ,Sivakasi ,Thirutangal ,Tamilarasan ,Tirutangal Alamarathupatti Road Pasumbonnagar ,Tirutangal ,
× RELATED சிவகாசி மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மழை கோட்