×

6 மாத குழந்தையுடன் இளம்பெண் மாயம்

கிருஷ்ணகிரி, செப்.29: பர்கூர் பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (35). இவரது மனைவி சுனிதா (30). இவர்களுக்கு கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 6 மாதத்தில் அனுசியா என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில், கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஏற்பட்ட தகராறில், சுனிதா கோபித்துக்கொண்டு, அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு குழந்தையுடன் சென்றுவிட்டார். நேற்று முன்தினம் தாய் வீட்டில் இருந்து குழந்தையுடன் வெளியே சென்ற சுனிதா, மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்காததால், இதுபற்றி அவரது தாய் மகேஸ்வரி அளித்த புகாரின் பேரில், பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 6 மாத குழந்தையுடன் இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Arun Kumar ,Old Post Office Street, Barkur ,Sunitha ,Anusia ,Mayam ,
× RELATED கிருஷ்ணகிரி கிழக்கு நா.த.க.வில் இருந்து 100 பேர் விலகல்..!!