×

பிளேடால் கழுத்தை அறுத்துகொண்டு வெல்டிங் தொழிலாளி தற்கொலை முயற்சி

மயிலம், செப். 29: கடன் தொல்லையால் வெல்டிங் தொழிலாளி பிளேடால் கழுத்தை அறுத்துகொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே அவ்வையார்குப்பம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் தர்(35), வெல்டிங் தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக அளவுக்கு அதிகமாக கடன் வாங்கியதாகவும், இதனால் கடன் தொல்லையால் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் கேணிப்பட்டு செல்லும் வழியில் உள்ள அவ்வையார்குப்பம் ஏரிக்கு வந்த தர், தான் கொண்டு வந்த பிளேடால் கழுத்தை அறுத்துகொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பிளேடால் கழுத்தை அறுத்துகொண்டு வெல்டிங் தொழிலாளி தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Peacock ,Venkatesan ,Avvaiyarkuppam Mariamman Koil Street ,Mylam ,Villupuram district ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள்...