×

சடலங்களை எரிக்க கட்டுப்பாடு விதிப்பு

மல்லசமுத்திரம், செப்.29: மல்லசமுத்திரம் பேரூராட்சியில், எரிவாயு தகனமேடை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், சடலங்களை எரிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மல்லசமுத்திரம் பேரூராட்சி செயல்அலுவலர் மூவேந்திரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:மல்லசமுத்திரம் பேரூராட்சியில் உள்ள நவீன எரிவாயு தகனமேடை பராமரிப்பு பணி மேற்கொள்வது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது. எனவே, மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் இறந்தவர்களின் சடலங்களை, இயற்கையான முறையில் எரிக்கவோ, புதைக்கவோ காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு மேல் வரும் சடலங்களை புதைக்கவோ, எரிக்கவோ இவ்விடத்தில் அனுமதி இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post சடலங்களை எரிக்க கட்டுப்பாடு விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Mallasamudram ,Mallasamudram Province ,Mullasamutram ,District Executive Officer ,Muvendrapandian ,
× RELATED சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு திறப்பு