சேலம் பதிவுத்துறை டிஐஜி மேலும் ஒரு மோசடி வழக்கில் கைது.

சேலம்: சேலம் பத்திரப் பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் மேலும் ஒரு மோசடி வழக்கில் கைது செய்துள்ளனர். தாம்பரம் வரதராஜபுரத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் மூலம் மாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தாம்பரத்தில் ரூ.50 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணம் மூலம் மாற்றிய புகாரில் ஏற்கனவே இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர்.

ஆள்மாறாட்டம் மூலம் ரூ10 கோடி நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத்தை நீதிமன்ற உத்தரவுப்படி வரும் 8ம் தேதி வரை சிபிசிஐடி போலீசார் சிறையில் அடைத்தனர். இவர் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து பாதிக்கப்பட்டோர் புகார் அளித்து வருவதால், 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தென் சென்னையில் பதிவுத்துறை அதிகாரியாக ரவீந்திரநாத் பணியாற்றிய போது, தாம்பரம் அடுத்த வரதராஜபுரத்தில் சையது அமான் என்பவருக்கு சொந்தமாக ரூ10 கோடி மதிப்புள்ள 85 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அவரது தந்தை 1980ம் அண்டு சையது அமானுக்கு எழுதிக் கொடுத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு அந்த இடத்தை இசி செய்து பார்த்த போது, அவரது தந்தை காந்தம்மாள் என்பவருக்கு விற்பனை செய்ததுபோல் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் சையது அமான் 1980ம் ஆண்டே அவரது தந்தை எழுதி கொடுத்த நிலையில், 1987ம் ஆண்டு எப்படி காந்தம்மாளுக்கு விற்பனை செய்ய முடியும் என்று சந்தேகம் வந்தது. நிலத்திற்கான ஒரிஜினல் பத்திரங்கள் சையது அமானிடம் இருந்ததால், போலி பத்திரங்கள் மூலம் காந்தம்மாளுக்கு பத்திரப்பதிவு செய்த ரவீந்திரநாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜி தினேஷ் ஆலிவர் பொன்ராஜிடம் புகார் அளித்தார்.

அந்த புகாரின் மீதும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அதேநேரம் சையது அமான் ஆள்மாறாட்டம் மோசடி குறித்து கடந்த 2011ம் ஆண்டு உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மோசடி தொடர்பாக விசாரணை நடத்த சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன்படி சிபிசிஐடி போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் இன்று மேலும் ஒரு மோசடி வழக்கில் சேலம் பத்திரப் பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத்தை கைது செய்துள்ளனர்

The post சேலம் பதிவுத்துறை டிஐஜி மேலும் ஒரு மோசடி வழக்கில் கைது. appeared first on Dinakaran.

Related Stories: