×

வாகன விதிமீறலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை

கோவை, செப். 28: கோவையில் வாகன விதிமீறலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று காணொலி காட்சி மூலம் பேசியதாவது: கோவை மாநகரில் விபத்துகள் ஏற்படாத வகையில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். சாலை விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோவை அவிநாசி சாலையில் அதி வேகமாக விதிகளை மீறி செல்பவர்கள் வாகனங்களில் உள்ள நம்பர் பிளேட்டுகள் அங்கு வைக்கப்பட்டுள்ள கேமராக்கள் மூலம் படம் பிடிக்கப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதே போன்று ஒருமுறை தவறு செய்து அபராதம் விதிக்கப்பட்டவர்கள் மீண்டும், மீண்டும் தொடர்ந்து தவறு செய்யும்போது அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அனைவரும் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடித்து விபத்து இல்லா கோவையை உருவாக்க துணை நிற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post வாகன விதிமீறலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Police Commissioner ,Balakrishnan ,Dinakaran ,
× RELATED கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்