சத்தியமங்கலம்,செப்.28: ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்ற வள்ளலாரின் கோட்பாடுகளை கடைப்பிடிக்கும் வகையில் சத்தியமங்கலம் அருகே உள்ள இக்கரை தத்த பள்ளி துண்டன்சாலையில் தென் கயிலை பர்வதம் அறக்கட்டளையின் கீழ் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை அமைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவிற்கு அறக்கட்டளை நிறுவனர் வெங்கடேசன் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தலைவர் புஷ்பம் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். செயலாளர் சீனிவாசன் வரவேற்றார். சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் குழுமங்களின் தலைவர் எஸ்.வி. பாலசுப்பிரமணியம் ஞான சபையின் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி வழிபட்டார். இதைத்தொடர்ந்து தினமும் அன்னதானம் வழங்கும் தருமசாலை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கப்பட்டது.
பின்னர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையில் ஜோதி தரிசன திறப்பு விழா நடைபெற்றது. வள்ளலாரின் கோட்பாடுகளை பரப்பும் வகையில் தினமும் பிரார்த்தனைகள், தியான வகுப்புகள் இங்கு நடைபெற உள்ளது.நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாகிகள் வைஷ்ணவி வெங்கடேசன், கோமதி சீனிவாசன்,வாசகி தங்க மாளிகை உரிமையாளர் பிரபுகாந்த், மகா மந்திராலயம் குழந்தைவேல்,டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, தொழிலதிபர் குப்புராஜ், வழக்கறிஞர் அஜித் குமார், பூ மார்க்கெட் நிர்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
The post சத்தியமங்கலம் அருகே சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை திறப்பு appeared first on Dinakaran.