இந்திய சைகை மொழி தினம் மாற்றுத்திறனாளிகளுடன் கலெக்டர் கலந்துரையாடல்

 

திருவாரூர். செப்.28: இந்திய சைகை மொழி தினம் மற்றும் சர்வதேச காது கேளாதோர் தினத்தையொட்டி திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் காது கேளாத மாற்றுத்திறனாளிகள் அமைப்பை சார்ந்தவர்களிடம் கலெக்டர் சாருஸ்ரீ கலந்துரையாடினார். செவித்திறன்குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளின் இந்திய சைகை மொழி தினம் மற்றும் சர்வதேச காது கேளாதோர் தினம் கடந்த 23ந் தேதி முதல் திருவாரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதன்ஒரு பகுதியாக காது கேளாத மாற்றுத்திறனாளிகள் அமைப்பை சார்ந்தவர்கள் மற்றும் பிற மாற்றுத்திறனாளிகளிடம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் சாருஸ்ரீ கலந்துரையாடினார். பின்னர் செவித்திறன் குறைபாடுயுடைய மாற்றுத்திறனாளி குழந்தைகளிடம் கோரிக்கைகளை மனுக்களையும் கலெக்டர் சாருஸ்ரீ பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா மற்றும் சிறப்புப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

The post இந்திய சைகை மொழி தினம் மாற்றுத்திறனாளிகளுடன் கலெக்டர் கலந்துரையாடல் appeared first on Dinakaran.

Related Stories: