சீர்காழி,செப்.28: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் பெண்கள் தங்கும் விடுதியில் தமிழ்நாடு ஆதிதிராவிட நல வாரிய தலைவர் மதிவாணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து காரைமேடு ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறை கட்டிடங்களை பார்வையிட்டார். பின்பு கொள்ளிட முக்கூட்டில் தாட்கோ மூலம் வழங்கப்பட்ட ஆட்டோவை பார்வையிட்டார்.
தொடர்ந்து வடகாலில் தாட்கோ மூலம் கடன் பெற்று செயல்பட்டு வரும் ரத்த பரிசோதனை மையத்தை ஆய்வு செய்தார். அப்போது சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் ஆதி திராவிட நலத்துறை கூடுதல் ஆட்சியர் சுரேஷ், சீர்காழி ஆர்டிஓ அர்ச்சனா, சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், ஆதிராவிட நலத்துறை தனி தாசில்தார் பிரான்ஸ்சோவா, திமுக ஒன்றிய செயலாளர் பஞ்சுகுமார், கிராம நிர்வாக அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
The post சீர்காழி பகுதியில் தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி தலைவர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.