×

டிஎஸ்பி பொறுப்பேற்பு

தேன்கனிக்கோட்டை, செப்.28: தேன்கனிக்கோட்டை டிஎஸ்பியாக பணிபுரிந்து வந்த சாந்தி, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, நாமக்கல் டிஎஸ்பியாக இருந்த ஆனந்தராஜ், தேன்கனிக்கோட்டை டிஎஸ்பியாக நேற்று பொறு பேற்றுக்கொண்டார். அவருக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது டிஎஸ்பி கூறுகையில், ‘கர்நாடக மாநில எல்லை பகுதியில் அருகில் உள்ளதால், சட்டம் ஒழுங்கு பாதுகாக்க தனி கவனம் செலுத்தப்படும். பொதுமக்கள் தங்கள் குறைகளை எந்த நேரத்திலும் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்,’ என்றார்.

The post டிஎஸ்பி பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : DSP ,Dhenkanikottai ,Shanthi ,Oothukottai ,Tiruvallur district ,Anandraj ,Namakkal ,Dhenkanikot ,Dinakaran ,
× RELATED தேவகோட்டையில் பல ஆண்டு கால ஆக்கிரமிப்புகள் அகற்றம்: டிஎஸ்பி நடவடிக்கை