தேவகோட்டை, செப். 27: தேவகோட்டை தனியார் கல்லூரி முதுகலை தமிழ்த்துறை சார்பில் வீரமா முனிவர் தமிழ் மன்ற கூட்டம் நடந்தது. கல்லூரி செயலர் செபாஸ்டியன் தலைமை வகித்தார். முதல்வர் ஜான் வசந்தகுமார் முன்னிலை வகித்தார். தமிழ் துறைத்தலைவர் தர்மராஜ் பேசுகையில், ‘‘தமிழ்த்துறை மற்றும் பிறதுறைகளைச் சார்ந்த மாணவர்கள் தங்களது தனித்திறமைகளான பேச்சாற்றல், கவிதை எழுதுதல், கட்டுரை எழுதுதல் ஆகிய திறன்களை வெளிக்கொண்டு வரும் நோக்கில் இந்த மன்றம் உருவாக்கப்பட்டுள்ளது’’ என்றார்.இதில் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் உதவிப்பேராசிரியை அம்சவள்ளி, மாணவி நித்யகல்யாணி செய்திருந்தனர்.
The post தமிழ் மன்ற கூட்டம் appeared first on Dinakaran.