×

திருப்பத்தூர் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்

திருப்புத்தூர், செப். 27: திருப்புத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. யூனியன் சேர்மன் சண்முக வடிவேல் தலைமை வகித்தார். துணைச்சேர்மன் மீனாள் வெள்ளைச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியம் முன்னிலை வகித்தனர். மேலாளர் செல்லத்துரை வரவேற்றார். கூட்டத்தில், ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பையா, கலைமாமணி, ராமசாமி, பழனியப்பன், சுமதி கலைமகள், பாக்கியலட்சுமி, பன்னீர்செல்வம், சகாதேவன், ராமேஸ்வரி, அலுவலகப் பணியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர். அலுவலக உதவியாளர் மாணிக்கராஜ் வரவு செலவு கணக்கு அறிக்கை வாசித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணகுமார் நன்றி கூறினார்.

The post திருப்பத்தூர் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Tirupattur Union Councilors ,Tiruputhur ,Union Chairman ,Shanmukha Vadivel ,Vice-Chairman ,Meenal Vellichami ,Regional Development Officer ,Sathyam ,Chellathurai ,Tirupattur Union Councilors Meeting ,
× RELATED திருப்புத்தூர் தாலுகாவில் மழை...