×

டூவீலர் மோதி விவசாயி பலி

கிருஷ்ணகிரி, செப்.27: கிருஷ்ணகிரி மேல் கரடிகுறி பகுதியைச் சேர்ந்தவர் சென்றாயன் (84), விவசாயி. இவர் நேற்று முன்தினம், டூவீலரில் கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தமிழ்நாடு ஓட்டல் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மற்றொரு டூவீலர், சென்றாயன் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர், பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுபற்றி கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டூவீலர் மோதி விவசாயி பலி appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Gandhaayan ,Krishnagiri Mell Karadikrigi ,Krishnagiri-Chennai National Highway ,Tamil Nadu Hotel ,Gangayan ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி கிழக்கு நா.த.க.வில் இருந்து 100 பேர் விலகல்..!!