கோவில்பட்டி, செப். 27: கோவில்பட்டி இனாம்மணியாச்சியில் மாவட்ட கலை பண்பாட்டு துறை சார்பில் ‘நோபல் வேர்ல்ட் ரெகார்ட்’போட்டி நடத்தப்பட்டன. இதில் சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட கலை பண்பாட்டு துறை செயலாளர் பரமேஸ்வரி தலைமையில் ஆரி ஒர்க், பேஸ் ஆர்ட் கலரிங், ஓவியம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற 20 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவர்கள் கடம்பூர் ராஜூ எம்எல்ஏவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
The post கலை போட்டியில் வென்றவர்கள் கடம்பூர் ராஜூ எம்எல்ஏவிடம் வாழ்த்து appeared first on Dinakaran.