×

சாலைகளில் வர்ணம் பூசும் பணி தீவிரம்

சூளகிரி, செப்.27: சூளகிரி பகுதியில் நெடுஞ்சாலைதுறை சார்பில், சாலை பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விபத்துகளை தடுக்கும் வகையில், ஓசூர் கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை பகுதிகளில், வேகத்தடைகளில் மீது வர்ணம் பூசும் பணி நடைபெற்றது. இரவு நேரங்களில் அதிக வேகத்தில் வரும் வாகன ஓட்டிகள் வேகத்தடை உள்ளதை கவனிக்காமல் சென்று விபத்தில் சிக்குவதை தடுக்கவும், பொதுமக்கள் பாதுகாப்பாக சாலையை கடந்து செல்ல, நெடுஞ்சாலை துறையினர் வர்ணம் பூசும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.

The post சாலைகளில் வர்ணம் பூசும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Choolagiri ,Highways Department ,Hosur Krishnagiri highway ,Dinakaran ,
× RELATED இணைக்கப்படாத கால்வாயில் இருந்து...