×

ஏரலில் மனிதநேய விருது வழங்கும் விழா

ஏரல், செப். 27: ஏரலில் வஹ்தத்தே இஸ்லாமிய ஹிந்த் கிளை நடத்திய மனிதம் போற்றுவோம் தேசிய அளவிலான தொடர் பிரசாரத்தை முன்னிட்டு சகோதரத்துவ சங்கமம் மற்றும் மனிதநேய விருது வழங்கும் விழா நடந்தது.
ஏரல் கிளை தலைவர் பைஷல் அஹமது தலைமை வகித்தார். அனைத்து சமுதாய தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முன்னிலை வகித்தனர். ரியாஸ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஏரல் முஸ்லிம் வணிகர் நலச்சங்க தலைவர் பாக்கர்அலி, ஏரல் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் தசரதபாண்டியன், பேரூராட்சி தலைவர் சர்மிளாதேவி மணிவண்ணன், முன்னாள் தலைவர் எட்வர்ட் மற்றும் வஹ்தத்தே இஸ்லாமிய ஹிந்த் தர்பியா செயலாளர் ஷமீமுல் இஸ்லாம், மாநில ஆலோசனை குழு உறுப்பினர்கள் அலாவுதீன், முகம்மது ரபீக் ஆகியோர் பேசினர். விழாவில் பேரிடர் மற்றும் வெள்ளப்பெருக்கு காலங்களில் மனிதநேயத்தோடு பணியாற்றியவர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது.

The post ஏரலில் மனிதநேய விருது வழங்கும் விழா appeared first on Dinakaran.

Tags : Humanity Award Ceremony ,Airal ,Eral ,Humanism Pothum ,Wahdate Islami Hind ,Erel ,Aeral ,president ,Baishal Ahmed ,Humanity ,
× RELATED தாமிரபரணி வெள்ளத்தில் சேதமடைந்த ஏரல்...