×

கட்டிட தொழிலாளி மர்ம சாவு உறவினர்கள் சாலை மறியல்

ராமநாதபுரம்,செப்.26:ராமநாதபுரம் அருகே கட்டிட தொழிலாளி சாவில் மர்மம் இருப்பதாக கூறி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த முபாரக் மகன் முகமது முஸ்தபா(36). கட்டிட தொழிலாளி. உறவினர் ஒருவர் வீட்டில் பணம் திருடு போனது. பணம் திருடு போனது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என முகமது முஸ்தபா தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் முகமது முஸ்தபா வீட்டில் தூக்கில் தொங்கியுள்ளார். கேணிக்கரை போலீசார் உடலை மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் முஸ்தபாவின் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு மதுரை-ராமேஸ்வரம் சாலையில் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதால் மறியல் கைவிடப்பட்டது.

The post கட்டிட தொழிலாளி மர்ம சாவு உறவினர்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Muhammad Mustafa ,Mubarak ,Indra Nagar ,
× RELATED வினாதாள்களை சரி பார்த்து மாணவர்களுக்கு வழங்க உத்தரவு