சேறும், சகதியுமான செங்குன்றம் ஜிஎன்டி சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

புழல்: செங்குன்றம் ஜிஎன்டி சாலையில், சிறிய மழைக்கே சேறும், சகதியுமாக மாறிய சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். புழல், கதிர்வேடு, லட்சுமிபுரம் ரெட்டேரி, புத்தகரம், செங்குன்றம், பாடியநல்லூர், சோழவரம், காரனோடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 22ம் தேதி நள்ளிரவில் அரை மணி நேரம் மழை பெய்தது. இதனால், புழல் மற்றும் செங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி, சிறுசிறு குளங்கள்போல் காட்சியளித்தது.

அதேபோல், செங்குன்றம் ஜிஎன்டி சாலை நெல்மண்டி பகுதியில், நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் காரணமாக, மழைநீர் கால்வாயில் இருந்து வெளியேறி சேறும், சகதியுமாக காணப்படுவதால், இச்சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து அடிபடுவது தொடர் நிகழ்வாக இருக்கிறது. எனவே, மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் செங்குன்றம் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து ஜி.என்.டி சாலையில் புதிதாக போடப்பட்டுள்ள மழைநீர் கால்வாயில் இருந்து மண்ணை அள்ள உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நெல் மார்க்கெட் பகுதியில் முடிக்கப்படாமல் இருக்கும் கால்வாய் பணியை உடனடியாக முடித்து, கால்வாய் பணியை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று செங்குன்றம் மற்றும் சுற்றுவட்டார வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post சேறும், சகதியுமான செங்குன்றம் ஜிஎன்டி சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: