அண்ணா பல்கலை. சார்பில் பேட்மிட்டன் போட்டி ஆர்.எம்.கே. கல்லூரி சாம்பியன் பட்டம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆண்டார்குப்பம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பாக பேட்மிட்டன் போட்டி நேற்று நடைபெற்றது. போட்டியில் கவரப்பேட்டை ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரி, ஏ.எம்.எஸ். கல்லூரி, வேலம்மாள் கல்லூரி, வேல்டெக் கல்லூரி, கோஜன் கல்லூரி, எஸ்.ஏ. இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் கலைக் கல்லூரிகளில் படிக்கும் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, நெற்குன்றம், அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கு ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு என பேட்மிட்டன் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் கவரப்பேட்டை ஆர்.எம்.கே கல்லூரி முதல் பரிசு பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டாம் பரிசை வேல்டெக் கல்லூரியும், மூன்றாம் பரிசை வேலம்மாள் கல்லூரியும் பெற்றன. இதேபோல் பெண்கள் பிரிவில் ஆர்.எம்.கே. கல்லூரி மூன்றாம் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு கேடயமும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

The post அண்ணா பல்கலை. சார்பில் பேட்மிட்டன் போட்டி ஆர்.எம்.கே. கல்லூரி சாம்பியன் பட்டம் appeared first on Dinakaran.

Related Stories: