கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், செப்.24: பெரம்பலூர் துறை மங்கலம் பகுதியில் உள்ள தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பாக, நேற்று (23ஆம் தேதி) திங்கட்கிழமை பகல் 1மணிஅளவில் கோரிக்கை ஆர்ப்பாட்டம்நடைபெற்றது. நெடுஞ்சாலைத்துறை மறு சீரமைப்பு பெறும் பாதிப்பு பணியிடங்கள் ஒழிப்பை அனுமதிக்க மாட்டோம். மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பின், மூலம் 3500-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் ஒழிக்கப் படும்.கிராமப்புற இளைஞர் களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படும் அபாயத்தை அனுமதிக்க மாட்டோம். சாலை பணியாளர்களின் 41-மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும்.

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கப்படும் பட்சத்தில் சுங்கச்சாவடிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும், சுங்கச்சாவடிகட்டணம்அரசு கஜானாவுக்கே செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உட்கோட்ட துணைத் தலைவர் மதியழகன் தலைமை வகித்தார்.உட்கோட்ட செயலாளர் விஜயகுமார் வரவேற்றார். மணிவேல் முன்னிலை வகித்தார். கோட்டத் தலைவர் ராஜ்குமார் தொடக்கஉரையாற்றினார். கோட்ட செயலாளர் சுப்பிர மணியன் கோரிக்கை விளக்கவுரை பேசினார். டிஎன்ஜிஇஏ வட்ட துணைத் தலைவர் மகாதேவன் கோட்ட துணைத் தலைவர் கருணாநிதி ஆகியோர் வாழ்த்துரை பேசினர். சங்கத்தின்மாநிலதுணைத் தலைவர் மகேந்திரன் நிறைவுறை பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 20 பெண்கள் உட்பட 12 பேர் கலந்து கொண்டனர். உட்கோட்ட பொருளாளர் ராமநாயகம் நன்றி தெரிவித்தார்.

The post கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: