அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்; ஆண்டுக்கு ₹10 லட்சம் சம்பளத்தில் பணிநியமன ஆணை பெற்ற மாணவர்களுக்கு, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் வாழ்த்து

பெரம்பலூர், செப்.24: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் 20-09-2024 அன்று பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ரினெக்ஸ் டெக்னாலஜி என்ற நிறுவனம் வளாகத்திற்கு வருகைபுரிந்து நேர்காணலை நடத்தியது. அந்த நேர்காணலில் கலந்துகொண்ட வேளாண் பொறியியல் துறையை சார்ந்த அஞ்சலி சேவியர், அருணிமா, ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ் துறையை சார்ந்த, ஸ்ரதயா நரேஷ், காவியா, நவீன், ஹலிதா பேகம், ரோஹித் சரவணனன், முஹமது நாசில், பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் துறையை சார்ந்த காயத்ரி, தேவி, கோப்பெருந்தேவி, கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங் துறையை சார்ந்த ஆதித்ய குமார், த்ரிஷா, பார்மாசூட்டிக்கல் டெக்னாலஜி துறையை சார்ந்த பூரணி, உணவு தொழில்நுட்பம் துறையை சார்ந்த அனிதா, எம் பி எ துறையை சார்ந்த சாலிகா, எம் சி எ துறையை சார்ந்த தாரணி ஆகிய 17 பேர் ஆண்டுக்கு பத்து லட்சம் ரூபாய் ஊதியத்தில் பணிநியமன ஆணைகளை பெற்றுள்ளனர். இவர்கள் மாண்பமை வேந்தர் சீனிவாசனிடம் ஆசி பெற்றனர்.

அப்பொழுது மாணவர்களை வாழ்த்தி பேசும்போது வேந்தர் கூறியதாவது: “ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் ஊதியத்துடன் இந்த மதிப்புமிக்க, சிறந்த வாய்ப்பைப் பெற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு, எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் எப்பொழுதும் அனைவரிடமும் பணிவுடன் நடந்து கொள்ளவேண்டும், இந்த பயணமானது உங்கள் வாழ்க்கையில் இன்னும் பல சாதனைகளின் தொடக்கமாக அமையட்டும். நீங்கள் நமது கல்லூரியை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள் என்று பேசினார். இந்த நிகழ்வில் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் சண்முக சுந்தரம், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் வேல்முருகன், புலமுதல்வர் (அகடெமிக்) முனைவர் அன்பரசன், புலமுதல்வர் (பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு துறை) முனைவர் சண்முக சுந்தரம், நான்காமாண்டு ஒருங்கிணைப்பாளர் முனைவர் கார்த்திகா, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

The post அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்; ஆண்டுக்கு ₹10 லட்சம் சம்பளத்தில் பணிநியமன ஆணை பெற்ற மாணவர்களுக்கு, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: