×

மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவர் கமல்ஹாசன்: ம.நீ.ம. பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றம்!

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யத்தின் 2 வது பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் பொதுக்குழு கூட்டம் என்பதால், முன்னதாகவே பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சியினருக்கு மநீம தலைமை சார்பில் கடிதம் அனுப்பப்படிருந்தது.

இந்த பொதுக்குழுவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் உள்பட 700 க்கும் மேற்பட்டோர் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு நடைபெறும் இந்த கூட்டத்தில், 1414 பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 2570 பேர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் 20 க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற ம.நீ.ம. கட்சியின் 2வது பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்; மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக மீண்டும் கமல்ஹாசனை வாய்மொழியாக தேர்வுசெய்து தீர்மானம், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுக்குழுவில் தீர்மானம், தேர்தலை எதிர்கொள்ள ஏதுவாக பூத்திற்கு குறைந்தது 5 பேரை நியமிக்க வேண்டும், மக்கள் நீதி மய்ய புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும் பொதுக்குழுவில் தீர்மானம் பொதுக்குழுவில் மேலும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. பொதுக்குழு முடிவடைந்த பிறகு கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவர் கமல்ஹாசன்: ம.நீ.ம. பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றம்! appeared first on Dinakaran.

Tags : Kamalhasan ,People's Justice Commission ,M. ,Chennai ,2nd General Committee Meeting ,People's Justice ,Mayam ,Kamal Hassan ,Kamarajar Arena ,Denampetta, Chennai ,Kamalhassan ,People's Justice Institute ,Committee ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரத்தில் செப்டம்பர் 28ம் தேதி...