×

வரலாற்றில் இல்லாத அளவுக்கு சென்னையில் ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சம்!

சென்னை: வரலாற்றில் இல்லாத அளவுக்கு சென்னையில் ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.55,680-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து அதிரடியாக உயர தொடங்கியது. தினம் தினம் புதிய உச்சத்தையும் தொட்டது. கடந்த ஜூலை 17ம் தேதி ஒரு சவரன் ரூ.55,360க்கு விற்பனையானது. இது, தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலையாகும்.

இது நகை வாங்குவோரை அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை உள்ளாக்கி வந்தது. இந்நிலையில், 2024-25ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. பட்ஜெட் எதிரொலியாக தங்கம் விலை எப்படி ஏறியதோ? அதே வேகத்தில் குறைந்ததை காண முடிந்தது. இந்த ஆறுதல் என்பது சில நாட்கள் மட்டுமே நீடித்தது. மீண்டும் பழையபடி தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று வரலாற்றில் இல்லாத அளவுக்கு சென்னையில் ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.55,680-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை முன்னதாக கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.6,920க்கும், ஒரு சவரன் ரூ.55,360க்கும் விற்பனை செய்யப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது. இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக ஒரு சவரன் ரூ.55,680 என்கிற வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

 

The post வரலாற்றில் இல்லாத அளவுக்கு சென்னையில் ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சம்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை மெரினாவில் உள்ள நீச்சல்...