×

பேராசிரியர் க.அன்பழகனின் சகோதரி மறைவு; முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: பேராசிரியர் க.அன்பழகனின் சகோதரி ராஜம் ராமதாஸ் மறைவிற்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை: நம் நெஞ்சங்களில் நிறைந்து வாழும் இனமானப் பேராசிரியரின் அன்புச் சகோதரி ராஜம் ராமதாஸ் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதோடு, அவரது பிரிவால் வாடும் அவரது மகன் மருத்துவர் குணாளன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post பேராசிரியர் க.அன்பழகனின் சகோதரி மறைவு; முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : K. Anpahagan ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,DMK ,President ,Tamil Nadu ,M.K.Stalin ,K.Anpahagan ,Rajam Ramadoss ,Rajam Ramdas Nattaya ,M.K.Stal ,
× RELATED தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை...