தோடர் பழங்குடியின மக்கள் விற்பனை நிலைய கட்டுமான பணி தீவிரம்


ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் தோடர் பழங்குடியின மக்களின் விற்பனை நிலையம் கட்டுமான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் தோடர் பழங்குடியின மக்கள் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். ஊட்டி தாவரவியல் பூங்காவில், தோடர் பழங்குடியின மக்கள் தயாரிக்கும் பொருட்கள் விற்பனை செய்யும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இது அவர்களின் பாரம்பரிய வீடுகளின் அமைப்பை போன்று உருவாக்கப்பட்டு அதில் பருத்தி ஆடைகள், நீலகிரி தைலம் உள்பட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த விற்பனை நிலையம் அமைக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆன நிலையில், பழுதடைந்தது. இந்த நிலையில் அதை சீரமைத்து தர வேண்டும் என தோடர் பழங்குடியின மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் மூலம் ரூ.3 லட்சம் மதிப்பில் விற்பனை நிலையம் சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது விற்பனை நிலையம் கட்டுமான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

The post தோடர் பழங்குடியின மக்கள் விற்பனை நிலைய கட்டுமான பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: