காவேரி மருத்துவமனை சார்பில் ஏட்ரிய குறுநடுக்கம் சிறப்பு கருத்தரங்கம்

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை சார்பில் ‘ஏட்ரிய குறுநடுக்கம் மீது நிகழ்நிலை தகவல்’ என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. ஏட்ரிய குறுநடுக்கம் (ஏ.எப்) என்பது, உலகளவில் லட்சக்கணக்கான நபர்களை பாதிக்கிற ஒரு நோயாகும். ஸ்ட்ரோக் / பக்கவாதம், இதய செயலிழப்பு போன்ற பெரிய இடர்வாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய இது, வாழ்க்கையின் தரத்தை கணிசமாக குறைத்துவிடும். இதற்கு தீர்வுகாண ஏட்ரிய குறுநடுக்கத்திற்கு கதிர்வீச்சுள்ள ப்ளோரோஸ்கோபி இல்லாமல் சிகிச்சை வழங்கும் புதிய முறையை காவேரி மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது. அதில் பெருமளவு ப்ளோஸ்கோப்பி (எக்ஸ் – ரேக்கள்) அதிகம் சார்ந்திருக்கும் வழக்கமான குறுநடுக்க அகற்றல் வழிமுறை இல்லாமல், இன்ட்ராகார்டியாக் எக்கோகார்டியோகிராபி (ஐசிஇ) மற்றும் 3டி எலக்ட்ரோ – அனாட்டமிக்கல் மேப்பிங் என்ற வழிமுறைகளைப் பயன்படுத்துவதால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சு வெளிப்படுதலுக்கான அவசியத்தை நீக்கிவிடுகிறது.

இதன்மூலம் அதிக பாதுகாப்பான, அதிக துல்லியமான முறையில் ஏட்ரிய குறுநடுக்கத்திற்கு சிகிச்சை அளிக்க முடியும் என காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளாது. மேலும் இச்செயல்திட்டத்தின் ஒரு அங்கமாக, “ஏட்ரிய குறுநடுக்கம் மீது நிகழ்நிலை தகவல்” என்ற தலைப்பில் ஒரு சிறப்பு கருத்தரங்கம் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை நடந்தது. அதில் நியூயார்க் டௌன்ஸ்டேட் மெடிக்கல் சென்டரில் இதய மின்னியங்கியல் சேவைகள் துறையின் இயக்குனரும், உலகளவில் புகழ்பெற்ற நிபுணருமான ஆடம் எஸ்.புட்சியானோவ்ஸ்கி இதில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

The post காவேரி மருத்துவமனை சார்பில் ஏட்ரிய குறுநடுக்கம் சிறப்பு கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: