சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 1556 கிலோ கெட்டு போன இறைச்சி பறிமுதல்

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 1556 கிலோ கெட்டு போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. டெல்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது கெட்டுபோன இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஏற்கனவே ஆக.21ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து சென்னை வந்த 600 கிலோ கெட்டு போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இறைச்சிகளை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதனை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உரிய சான்றிதழ் இல்லாமல் டெல்லியில் இருந்து ரயில் மூலமாக கெட்டுப்போன இறைச்சி கொண்டுவரப்பட்டதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னைக்கு வந்த கறி, சென்னையில் உள்ள பெரிய மால்கள், ஹோட்டல்கள், நட்சத்திர விடுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை மேற்கொள்ளப்பட இருந்தது. யார் யாரெல்லாம் இதை வாங்குகிறார்கள்? யார் யாருக்கெல்லாம் விற்கப்படுகிறது என்று குறித்தான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

கறியை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு எத்தனை நாட்கள் ஆனது என்பது குறித்து தெளிவான முடிவு வந்த பின்பு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கெட்டுப்போன உணவு உண்பதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. வெளி மாவட்டங்களுக்கு, மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் இறைச்சிக்கு தேவைப்படும் ஆவணங்கள் ஏதுமின்றி கொண்டு வரப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றார்.

The post சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 1556 கிலோ கெட்டு போன இறைச்சி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: