மகாவிஷ்ணு விவகாரத்தையடுத்து பள்ளி நிகழ்ச்சிகளில்யார், யார் பேச வேண்டும் என்ற நெறிமுறைகள் வரையறுக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி


தஞ்சாவூர்: மகாவிஷ்ணு விவகாரத்தையடுத்து பள்ளி நிகழ்ச்சியில் யார், யார் பேச வேண்டும் என்ற நெறிமுறைகள் வரையறுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். தஞ்சாவூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஒரு பிரச்னை வருகிறது என்றால், உடனடியாக அந்த பிரச்னையை சந்திக்க வேண்டும். அந்த பிரச்னைக்கு என்ன தீர்வு, என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும், எடுத்துவிட்டால் நான் அடுத்த பணிக்கு சென்றுவிடுவேன். எனவே காவல்துறை வசம் வழக்கு போய் உள்ளது. காவல் துறை அதற்கான நடவடிக்கை எடுப்பார்கள்.

மாற்றுத்திறனாளி சங்கத்தினர் அவமானப்படுத்தியதாக புகார் அளித்துள்ளனர். இனிமேல் காவல்துறையும், மாற்றுத்திறானாளி சங்கத்தினரும் பார்த்துக் கொள்வார்கள். அவர் செய்தது தப்பா இல்லையா என்று சட்டம் தன் கடமையை செய்யும். தமிழக முதல்வர் இதற்கு ஒரு குழு அமைக்க வேண்டும். சாதி மதம் பார்க்காத மாநிலமாக, அமைதியான மாநிலமாக இருக்கும்போது இது போன்று மூடநம்பிக்கையை தூண்டும் போது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டியது நமது கடமை. ஒவ்வொரு குடிமகனும் அறிவு சார்ந்து சிந்திக்க வேண்டும் என்று நம் இந்திய சட்டத்தில் உள்ளது.

அதை பின்பற்றி தான் முதல்வர் அமெரிக்காவில் பல்வேறு பணிகள் இருந்தாலும் அறிக்கை வெளியிட்டுள்ளார். நாங்கள் இனி பள்ளிக்கூடத்தில் நிகழ்ச்சிகள் நடக்கும்போது ஒரு குழு அமைத்து யார் யார் பேச வேண்டும்? என்ன மாதிரி நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்ற நெறிமுறைகள் வரையறுக்க இருக்கிறோம். மிக விரைவில் அதற்கான கமிட்டி அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post மகாவிஷ்ணு விவகாரத்தையடுத்து பள்ளி நிகழ்ச்சிகளில்யார், யார் பேச வேண்டும் என்ற நெறிமுறைகள் வரையறுக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: