பல்லடம் பகுதியில் புதிய ரக சோள விதைப்பண்ணையை வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு

திருப்பூர், ஜூலை 4: பல்லடம் பகுதியில் சோளத்தில் புதிய ரகமான கோ-32 விதை பண்ணையை வேளாண்மை துறை அதிகாரிகளான தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட மாவட்ட ஆலோசகர் அரசப்பன், தொழில்நுட்ப அலுவலர் லாவண்யா, வேளாண் அலுவலர் அஜித், உதவி விதை அலுவலர்கள் பாஸ்கரன், முத்துச்செல்வன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள் திட்டம் மத்திய அரசு மற்றும் மாநில அரசு நிதியுதவியுடன் ஊட்டச்சத்து மிக்க சிறு தானியங்களான சோளம், கம்பு, ராகி போன்றவற்றை அபிவிருத்தி செய்ய பல்வேறு இனங்களில் விவசாயிகளுக்கு மானிய உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

சோளத்தில் புதிய ரகமாக கோ 32 விதை உற்பத்தி செய்து தரும் விவசாயிகருக்கு சோள விதை விலையுடன் ரூ.30 கிலோவுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. விதைகள் விநியோகத்திற்கு கிலோவுக்கு ரூ. 30 மானியம். இதுதவிர நுண்ணூட்டச்சத்து, உயிர் உரங்கள், உயிரியல் காரணிகள், கோடை உழவு செய்தல், உயிரியல் பூச்சி மருந்துகள், விளம்பர பணி, கருத்தரங்கு ஆகிய இனங்களில் மானியம் வழங்கப்படுகிறது. அரிசி உணவை தொடர்ந்து சாப்பிடுவதால் உடம்புக்கு மாவு சத்து மட்டுமே கிடைக்கிறது. ஆனால் ஊட்டச்சத்து மிக்க சிறு தானியங்களான சோளம், கம்பு, ராகி, தினை, வரகு, குதிரைவாலி, வரகு போன்றவற்றை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

The post பல்லடம் பகுதியில் புதிய ரக சோள விதைப்பண்ணையை வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: