குறுஞ்சேரி ஊராட்சியில் கிராமங்களுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி

 

உடுமலை, ஜூலை 2: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 33 வகையான விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு மாநிலம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை வழங்கும் நிகழ்ச்சி குறுஞ்சேரி கிராமத்தில் நடைபெற்றது.

உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ் என்ற மெய்ஞானமூர்த்தி கலந்துகொண்டு கிரிக்கெட், கையுந்து பந்து, எறிபந்து, கால்பந்து, டென்னிகாய்ட், ஸ்கிப்பிங், கேரம், சிலம்பம், செஸ், கபாடி, இறகுப்பந்து போன்ற விளையாட்டுகள் மற்றும் உடற்பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் பனியன், விசில், கோன்ஸ், தொப்பி அடங்கிய உபகரணங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பரமேசுவரி, துணைத்தலைவர் மணியரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post குறுஞ்சேரி ஊராட்சியில் கிராமங்களுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: