கோத்தகிரி,மே 11: நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர்,மஞ்சூர்,குன்னூர்,கோத்தகிரியில் உள்ள பைன் கோல்டு நகைக் கடையில் அட்சய திருதியை நாளான நேற்று தங்கம் வாங்க ஏராளமான மக்கள் குவிந்தனர். அட்சய திருதியை தினத்தில் வாங்கும் புதிய பொருட்கள் வீடுகளில் தங்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. எனவே நேற்று தங்கம் வாங்க மக்கள் அதிக ஆர்வம் காண்பித்தால் நகைக்கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதுடன் மக்கள் தங்க நகைகளை ஆர்வத்துடன் வாங்கினார்கள். நீலகிரி மாவட்டத்தில் பந்தலூரை தலைமையிடமாக கொண்டு பந்தலூர்,மஞ்சூர்,குன்னூர்,கோத்தகிரி பகுதில் உள்ள பைன் கோல்டு ஜூவல்லரியில் வாடிக்கையாளர் கூட்டம் களை கட்டியது.
ஏற்கனவே வாடிக்கையாளர்களை கவரும் வகையில் முன்னணி நகை கடைகள் அனைத்தும் கடந்த சில தினங்களுக்கு முன்பே முன்பதிவை தொடங்கி இருந்தனர்.
செய்கூலி இல்லை. சேதாரம் இல்லை. தங்கத்துக்கு வெள்ளி இலவசம், ஒவ்வொரு விற்பனைக்கும் இலவச பரிசுகள் போன்ற கவர்ச்சிகரமான பரிசுகளையும் அறிவித்திருந்தனர். மேலும் நேற்று காலை வழக்கத்திற்கு முன்னதாகவே நகை கடைகள் திறக்கப்பட்டன. குன்னூர்,கோத்தகிரி,பந்தலூர்,மஞ்சூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் பைன் கோல்டு நகை கடையில் திருவிழா கூட்டம் போல் மக்கள் நகைகளை வாங்க திரண்டனர். இதற்கென புதிய டிசைன்களில் ஏராளமான தங்க நகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. பெரிய அளவில் நகைகள் வாங்க இயலாதவர்களும் கூட ஒரு கிராம், இரண்டு கிராம் வகையிலான தங்க நகைகளை வாங்கிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post அட்சய திருதியை நீலகிரியில் நகைக்கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம் appeared first on Dinakaran.