பாஜ பிரமுகர் மீது நிலமோசடி புகார் ராமநாதபுரம் எஸ்பி ஆபீசில் கவுதமி விசாரணைக்கு ஆஜர்

ராமநாதபுரம்: பாஜ பிரமுகர் மீது நிலமோசடி செய்த புகாரில், நடிகை கவுதமி ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே சுவாத்தான் பகுதியில், 64 ஏக்கர் நிலம் வாங்கி தருவதாக நடிகை கவுதமியிடம் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியை சேர்ந்த பாஜ பிரமுகர் அழகப்பன் கூறியுள்ளார். தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.57 லட்சம் மதிப்பிலான அந்த நிலத்தை, மதிப்பை உயர்த்திக் காட்டி போலியாக ஆவணம் தயாரித்து ரூ.3 கோடியை அழகப்பன் பெற்றுள்ளார். பின்னர் தான் அழகப்பன் போலியாக ஆவணம் தயாரித்து விற்பனை செய்தது கவுதமிக்கு தெரிய வந்தது.

இதுபற்றி ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஏற்கனவே நடிகை கவுதமி புகார் அளித்திருந்தார். இந்நிலையில் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் வழக்கு விசாரணைக்கு நேற்று நடிகை கவுதமி ஆஜராகி, தான் ஏமாற்றப்பட்டது குறித்து போலீஸ் அதிகாரியிடம் விளக்கம் அளித்தார். மோசடி நடைபெற்றது உறுதி செய்த பின்பு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நடிகை கவுதமி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘நிலம் வாங்கி தருவதாக நான் ஏமாற்றப்பட்டதும், தவறான ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்பனை செய்துள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன். காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்’’ என்றார்.

The post பாஜ பிரமுகர் மீது நிலமோசடி புகார் ராமநாதபுரம் எஸ்பி ஆபீசில் கவுதமி விசாரணைக்கு ஆஜர் appeared first on Dinakaran.

Related Stories: