வத்திராயிருப்பு, மே 5: வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரியில் கோடைகால அக்னி நட்சத்திரவெப்பத்தை தவிர்க்க பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் பாலகிருஷ்ணன் தலைமையில் டாக்டர்கள் ஜொனார்தனன், லோகேஸ்வரி மற்றும் மூத்த செவிலியர் பொற்செல்வி, செவிலியரகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பாலகிருஷ்ணன் பேசுகையில்,“கோடைகாலத்தில் வெப்ப அலை அதிகமாக இருப்பதால் மக்கள் தங்களை பாதுகாத்து கொள்வதற்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும். உடலில் நீர் சத்து குறையாமல் பராமரிக்கவும். பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகள் உட் கொள்ளவும். வீட்டு விட்டு வெளியே செல்லும் போது குடை மற்றும் குடிநீரை எடுத்து செல்லவும்.
மேலும் இளநீர்,மோர்,தர்பூசணி, ஓஆர்எஸ் கரைசல் அதிக அளவு குடிக்கவும். மெல்லிய தளர்வான பருத்தி ஆடை அணியவும். முடிந்தவரை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை முதியவர்கள் மற்றும் குழந்தைகள் வெளியே செல்ல வேண்டாம்’’ என்றார். வீட்டிலேயே ஓஆர்எஸ் கரைசல் தயாரிப்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
The post அரசு ஆஸ்பத்திரியில் வெப்ப அலை விழிப்புணர்வு appeared first on Dinakaran.