சென்னை கிண்டியில் அமைந்துள்ள காமராஜர் மணி மண்டப வளாகத்தில் ரூ.1.40 கோடியில் கட்டிட பணிகள்: செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் ஆய்வு

சென்னை:சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகம் சுமார் 18 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள காமராஜர் மணி மண்டபம், பண்டிதர் அயோத்திதாசர் மணி மண்டபம், இரட்டைமலை சீனிவாசன் மணி மண்டபம், பக்தவச்சலம் நினைவிடம், மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபம், தியாகிகள் மணிமண்டபம், வ.உ.சி. செக்கு, திறந்தவெளி அரங்கம், காந்தி அருங்காட்சியகம், ராஜாஜி நினைவகம் மற்றும் ராஜாஜி நினைவாலயம்,

பல்வேறு சுதந்திர போராட்ட தியாகிகளின் சிலைகளையும், நினைவு சின்னங்களையும் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் வைத்திநாதன், பார்வையிட்டு ஆய்வு செய்தார். வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகள் குறித்து பொதுப்பணித்துறை உயர் அலுவலர்கள் மற்றும் வெளி முகமை ஒப்பந்ததாரர்கள் ஆகியோருடன் நேரடியாக கலந்துரையாடி, பராமரிப்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

காந்தி மண்டப வளாகத்தில் உள்ள காந்தி அருங்காட்சியகம், காமராஜர் நினைவகம் மற்றும் பக்தவச்சலம் நினைவகம் ஆகியவற்றில் சுமார் 1.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்த கட்டிட பணிகளையும் இயக்குநர் வைத்திநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், வளாகத்தை மேலும் மேம்படுத்த உடனடியாக திட்ட மதிப்பீடு வழங்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் கே.பி.சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் எம்.ஸ்ரீதரன், செயற்பொறியாளர் இம்மானுவேல் ஜெய்கர், உதவி செயற்பொறியாளர் அருட்செல்வி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

The post சென்னை கிண்டியில் அமைந்துள்ள காமராஜர் மணி மண்டப வளாகத்தில் ரூ.1.40 கோடியில் கட்டிட பணிகள்: செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: