காஞ்சி இலக்கிய வட்ட கூட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காந்தி ரோடு தனியார் மண்டபத்தில் காஞ்சி இலக்கிய வட்டத்தின் சார்பில், \”ஜவ்வாது மலை வாழ்வும் வரலாறும்\” என்ற நூல் திறனாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் மு.அன்பழகன் திறனாய்வு மேற்கொண்டார். நூலாசிரியர் ஜெய்சங்கர் ஏற்புரை வழங்கினார். மார்க்சிய தமிழ் தேசிய எழுத்தாளர் அஸ்வகோஸ் (எ) ராஜேந்திரசோழன் படத்தை கவிஞர் பாரதி விஜயன் திறந்து வைத்து, நினைவுரை வழங்கினார்.

மருத்துவர் விமுனாமூர்த்தி, சிலம்புக்கலை வீரர் கோளிவாக்கம் மு.சுப்பிரமணி படத்தை, முனைவர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். வெயில் என்ற தலைப்பில் கவிஞர்கள் செல்வராசு, செல்ல குரு ஆகியோர் கவிதை வாசித்தனர். நிகழ்வில் ஏராளமான இலக்கிய ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை காஞ்சி இலக்கிய வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் காஞ்சி இளங்கவி, தமிழரசு ஆகியோர் செய்திருந்தனர்.

The post காஞ்சி இலக்கிய வட்ட கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: