வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரம் தேர்தல் கமிஷன் அஜாக்கிரதையே காரணம்: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

சென்னை: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது: வாக்குப்பதிவு சமயத்தில் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்ததால் சென்னையை பொறுத்தவரை பல பேர் வெளியூர் சென்று விட்டனர். அதனால் தான் வாக்குப்பதிவு குறைந்ததாக கருதுகிறோம். வெயில் மட்டும் காரணம் கிடையாது. பொதுவாகவே ஒரு மாநில அரசு மீது வெறுப்பு இருந்தால் தான் வாக்குப்பதிவு அதிகமாகும். ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை திமுக அரசு மீது மக்களுக்கு வெறுப்பு கிடையாது. இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டுள்ளதை தேர்தல் கமிஷன் பார்த்திருக்க வேண்டும். திமுக சார்பில் நாங்கள் பலமுறை தேர்தல் கமிஷனில் வலியுறுத்தி இருக்கிறோம். திமுக சார்பில் வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கடைசியாக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் கூட சொன்னேன். ஆனால், அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதுபற்றி அப்போதே நான் பேட்டியும் கொடுத்திருந்தேன். வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் சரிபார்த்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்யாமல் தவறி விட்டார்கள். இது தேர்தல் கமிஷனின் அஜாக்கிரதை என்று தான் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரம் தேர்தல் கமிஷன் அஜாக்கிரதையே காரணம்: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: