400 இடங்கள் என்று பாஜக காண்பித்து வந்த படம், முதல்கட்ட வாக்குப்பதிவின்போதே தோல்வி அடைந்துவிட்டது: தேஜஸ்வி யாதவ் விமர்சனம்

பாட்னா: 400 இடங்கள் என்று பாஜக காண்பித்து வந்த படம், முதல்கட்ட வாக்குப்பதிவின்போதே தோல்வி அடைந்துவிட்டது என தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். 18வது மக்களவை தேர்தல் நேற்று முதல் தொடங்கியுள்ளது. 7 கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் உள்பட 102 தொகுதிகளில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பாஜகவின் மலை அளவு பொய்களும், அறிக்கைகளும் சரிந்துவிட்டதாக விமர்சனம் செய்தார்.

மக்களவை தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின் வரும் தகவல்கள் இந்தியா கூட்டணிக்கு சாதகமாகவே உள்ளது. பீகார் மாநிலத்துக்கு பிரதமர் மோடி எத்தனை முறை வந்தாலும் அவரது பொய்யை ஒருநாளும் மறைக்க முடியாது என தெரிவித்தார். நேற்று நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் 70-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் இந்தியா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. நேற்று 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், 70-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் இந்தியா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. நல்ல வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என குறிப்பிட்டார்.

The post 400 இடங்கள் என்று பாஜக காண்பித்து வந்த படம், முதல்கட்ட வாக்குப்பதிவின்போதே தோல்வி அடைந்துவிட்டது: தேஜஸ்வி யாதவ் விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: