மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தொழிலாளர் நல வாரியங்கள் காணாமல் போகும்: கட்டுமான தொழிலாளர் நல வாரியம் எச்சரிக்கை

சென்னை: மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தொழிலாளர் நல வாரியங்கள் காணாமல் போகும் என கட்டுமான தொழிலாளர் நல வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு வருகிற 19ம் தேதி (வெள்ளி) தொடங்கி ஜூன் 1ம் தேதி இறுதிகட்ட (7வது கட்ட) தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்டத்திலேயே தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றம் மற்றும் விளவங்கோடு சட்டமன்றத்துக்கான இடைத்தேர்தல் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கு வருகிற 19ம் தேதி (வெள்ளி) தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜ தலைமையில் தனித்தனி கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் தேர்தலை சந்திக்கிறது.

அதன்படி தமிழகத்தில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், பெரம்பலூரில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களின் 44 சட்டங்களையும் ஒன்றிய அரசு சுருக்கியுள்ளது. தமிழ்நாட்டில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக செயல்பட்டு வரும் 18 வாரியங்களையும் பாஜக சுருக்கிவிடும். 18 வாரியங்கள் வைத்துள்ள ரூ.5,000 கோடியை மோடி அரசு வடமாநிலங்களுக்கு கொண்டு சென்றுவிடும். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தொழிலாளர் நல வாரியங்கள் காணாமல் போகும் என எச்சரிக்கை விடுத்தார்.

The post மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தொழிலாளர் நல வாரியங்கள் காணாமல் போகும்: கட்டுமான தொழிலாளர் நல வாரியம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: