தபால் வாக்கு பதிவு தொடங்கி விட்டதால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!!

சென்னை: தபால் வாக்கு பதிவு நடைமுறை தொடங்கி விட்டதால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலின் வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. அத்தியாவசிய பணியில் இருப்பவர்கள் மற்றும் 85 வயதுக்கு மேல் உள்ள முதியோர்கள் தபால் வாக்குகள் அளிக்க தகுதி உடையவர்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக நேரடியாக வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகளை பெறும் நடவடிக்கையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் இருந்த தனது பெயர் நீக்கப்பட்டுள்ளதால் மீண்டும் சேர்க்க கோரி கேத்ரின் மார்டின் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், எனக்கு தெரியாமலேயே என் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கபட்டது சட்டவிரோதமனது. மேலும், வாக்காளர் பட்டியலில் மீண்டும் பெயரை சேர்க்க கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில், தற்போது தபால் வாக்குகள் தொடங்கி விட்டதால் இனி பெயரை சேர்க்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, கேத்ரின் மார்டின் என்பவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 

The post தபால் வாக்கு பதிவு தொடங்கி விட்டதால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!! appeared first on Dinakaran.

Related Stories: